Sunday, November 15, 2009

புரிதல்

உன்னிடம் உன்னைப்பற்றி பேசவேண்டும்
ஆனால் அதில் நானும் உண்டு
மழை பெய்ய போகிறது
அப்படியே நடப்போமா ...

மழைவரும் "முன்பே" ...குடை எடுத்து வருகிறாய்...
அனைத்திற்கும் இப்படி " முன்பே " என்பது உண்டு
இருவர் இணையும் வாழ்வில் உண்டா ?
நான் திருமணத்தின் முன்பே புரிதல் எடுத்து வருகிறேன்

சிரிக்காதே ...

இது கவிதை இல்லை என்கிறாயா ?

இயல்பாய் பேசுகிறேன்

தேனிர் அருந்துகிறாயா ?
அங்கே பார்!...அந்தப்பெண் ...நீளமான கூந்தல்
கவர்ச்சியாய் இருக்கிறாள் அல்லவா ?
நீ அவளை ரசிக்கவில்லையா ?
ரவுத்திரம் கொள்கிறாய்
நீ ரசிக்கும் ஆடவன் பற்றியும் சொல்லு ...தவறில்லை
தேனிர் வந்துவிட்டது ...நான் புகைக்கலமா ?
உனக்கு பிடிக்கவில்லையா ?
தேனிரா...நான் புகைப்பதா ?
புன்னகைக்கிறாய்
நான் பேசுவது உனக்கு பிடித்திருக்கிறதா ?
ம் ...புகைப்பதற்கு சம்மதமா ...நன்றி
அப்படியென்றால்
உன்னை முத்தமிடுமுன் புகைத்துவிட்டு வரலாமா ?
ஏய் ! கோபம் கொள்ளாதே ரொம்ப அழகாகிறாய்
தேனிர் சிந்துகிறது ...ஆ !
ஒன்றுமில்லை சிறிதாக சுட்டுவிட்டது
ஏய்! இது என்ன உன் கையில் தழும்பு
சிறு வயதில் நாய் கடித்ததா ?
நாய்க்கு ஒன்றும் ஆகவில்லையே
துரத்தாதே ...
இந்த அரசாங்கம் பாதைகளை சரியாக போடுவதில்லை
இதில் ஓட முடியாது
சரி சரி நேரம் பார்க்கிறாய்
விரைவில் செல்ல வேண்டுமா ?
ஒ !..நான் சொல்ல வந்ததை விரைவில் சொல்ல வேண்டுமா ?
சொல்கிறேன் ஏன் பதட்டமாகிறாய் ?
மற்றவர்கள் எதாவது சொல்லுவார்களா ?
என்ன சொல்லுவார்கள் ?
நீ பெண் என்பது
பிறகு நீ திருமணவயது பெண் என்பது
நீ ஆமோதிக்கிறாயா ?
மற்றவர்களுக்காகவா ?
இப்போது நான் சொல்ல வந்ததைசொல்லட்டுமா ?
என் மருத்துவ சான்றிதல் பிடி
அப்படி குழப்பமாய் பார்க்காதே
திருமணம் செய்துகொள்ளலாமா ?
கண்கள் சிவந்தால் கோபம்
கன்னம் சிவந்தால் வெட்கம்
உனக்கு இரண்டும் சிவக்கிறதே
என்ன பார்க்கிறாய்
நான் இயல்பானவன்
உன்னை புரிந்து கொண்டேன்
உனக்கும் என்மேல் புரிதல் இருக்கிறதா ?
கண் கலங்குகிறாய் ?
ஆனந்த கண்ணீரா ?
அட உடனே சிரிக்கிறாய்
நானும் அழுகிறேனா ?
துடைக்காதே...அது மகிழ்ச்சி
சரி சரி இன்னொருமுறை புகைக்கட்டுமா ?
வேண்டாமா ....
உனக்கு பிடிக்கவில்லையென்றால் சரி
ஒரு சிலர் கவனிக்கிறார்கள்
மழை பெய்கிறது
நனைந்துகொண்டே
அப்படியே கொஞ்ச தூரம் நடப்போமா
உன்னிடம் உன்னைப்பற்றி பேசவேண்டும்
ஆனால் அதில் நானும் உண்டு...

1 comment: