Sunday, November 15, 2009

நான் இளவரசியை தேடி போக வேண்டும் ?

நான் எங்கிருக்கிறேன் ?
நீ அம்புலிமாமா கதையில் ...
தினத்தந்தி சிந்துபாத்தில் இல்லையா ?...
உன்னை மாற்றி அச்சடித்துவிட்டார்கள் ...
நான் இளவரசியை தேடி போக வேண்டும் ?
நான் அனுமதித்தால் மட்டுமே ...
நீங்கள் யார் ?
முருங்கைமர வேதாளம் ...
உன்னை ஒரு மன்னன் தூக்கித்திரிந்தானே ?
அவனுக்கு வயதாகிவிட்டது + தோள்வலி ...
எனது பாக்தாத் இளவரசி ?
என் கேள்விக்கு பதிலிட்டால் ...
என் பயணம் அதுவன்று ?
உன்தலை வெடித்து சுக்குநூறாகிவிடும் ...
ஆ? ...
கேள்வி ...
தாமரை யார்வசம் ?

அதிகாலை அரை ஊசலில்
பூமலர் வெடிக்க வெண்சிவந்த
மொட்டு மலர்ந்து ...
உன் உயிர்மடி திறந்து பூப்பெய்தி
மஞ்சள் செவ்விய கரங்கொண்டு
உயிர்ப்பிக்க தினம் வரும் இளங்கதிரா?

சிருங்கார இதழையும் கருவிழி அழகையும்
வேண்டா இசையின் உயிர்ப்பையும்
உன்மேல் கொட்டி
உன்கொடியிடையை அழுந்தப்பற்றி
இதழ்கள் சுவைக்கும் அழகையும்
அவ்வின்பத்தை மெல்ல மெல்ல
இசைந்து ஏற்றுக்கொள்ள செய்யும்
உணர்வையும் தரும் கருவிழி வண்டா?

இதழ்களைவிட மென்மையான
விரல்களைக்கொண்டு
பேதையான உன்னை போதையேற்றி
அங்கும் இங்கும் அசையும் வண்ணம்
நடனப்பயிற்சி அளித்து
கந்தர்வனைப்போல் உருவமில்லாமல்
தேகம் தழுவி இன்முகப்படுத்தும் தென்றலா ?

தாமரை யார்வசம் ?
காப்பாற்றுங்கள் ....
என்தலை வெடித்து சுக்குநூறாகிவிடும் ...
நான் இளவரசியை தேடி போக வேண்டும் ?

No comments:

Post a Comment