...
ஓசோன் குருட்டில் அக்கினி குஞ்சுகளாய் காஸ்மிக் கதிர்கள்
வறண்ட போர்வைமேல் நிழல் தேடி நாங்கள் எறும்புகள்
சுறுசுறுவென வியர்வையுடன் அமைதியாக படுத்துக்கிடந்தது மண்
சுற்றித்திரிகையில் எங்கும் கரகரவென வெய்யிலை விரும்பும் கட்டிடம்
ஆங்காங்கே செயற்கை உரமிட்ட நிழல் மரங்கள் உடல் எரிக்க
திரும்பிய பக்கமெல்லாம் தீ எரிய
பல குரல்கள் ஒரு அறையில் கேட்க நுழைந்தோம் அனுமதியின்றி
சூரியனை அடக்கிய குளிர்பெட்டியுடன் மழழைகள் பாடம் படிக்க
இவர்களை கடிக்கலாகது என எண்ணுகையில் தோன்றியது
ஈரத்திற்கு ஒதுங்கியது பள்ளியா?
அவர்கள் படிப்பது நன்றாக கேட்டது
rain rain go away
rain rain go away
மழழைகள் மழை பாட்டு பாட...
அறைந்த செவிகளுடன் சன்னலோரம் திரும்பினோம்
தூரத்தில் கானல் நீருற்றி அருவெறுப்பாக காய்ந்த மரம்
வெக்கையுடன் ஒதுங்கிய எங்களுக்கு வெட்கமாக இருந்தது
அனுதினம் மழைப்பெய்யும் ஐரோப்பா
இதற்க்கு பாட்டிசைத்த புலவன்
அவர்கள் நாடு ....அங்கு பாடு ....அது உண்மை
நாங்கள் எறும்புகள்
இவர்களின் பொய்கள் எங்களை இன்னும் கொழுத்தின
மழைக்கான எதிரிகளின் ஆவேசத்தில்
Rain Rain Come Again
Rain Rain Come Again
வானை நோக்கி உரக்க குரலிட்டு நடந்தோம் நேர்மையாக
நிழல் தேடி நாங்கள் எறும்புகள்
Rain Rain Come Again
Sunday, November 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment