Friday, July 23, 2010

மின்சாரத்திற்காக ...


தேவதைகள் ஒளிந்துகொள்ள
அவர்களைத்தேடி அரக்கர்கள் வரும்
மதிய வெய்யில் வெளியில்
போர்க்கள மண்ணில்
அழுந்த விழாத வியர்வை
போர்வாள் அறுத்த தழும்புகள்
சூரியனை பெற்று மின்னிய தேகம்
ம் ...போதும் ...போதுமென
சுவடிஎழுத போதுமான கூர்வலிமையுடன்
காற்றாற்றங்கரையில் நின்றிருந்தேன்

தேவதைகள்
யாருக்காக இங்கே நிற்கிறேனோ அவர்கள்
காப்பாற்றப்பட வேண்டிய தேவதைகள்
கரை நெருங்கிய அடர்ந்த காட்டின்
சிங்கத்தின் தொண்டை இருமலிட
மான்கள் ஒளியும் புதர்களுக்குள்
இடையினை ஓடியாமல் வளைத்து
புற்கள் அழுந்தாமல் அமர்ந்து வருந்தினர்
இவன் ...இறக்கப்படவல்ல

அதோ ...
தூரத்தில் அரக்கர்கள் அவர்கள் ...ஆம்
வெட்டுக்கத்தி ... சடை முடி....
கோர முகம் ... யானை வயிறு
ஹோ ...என்ற நீண்ட இரைச்சல்
கழுகுகள் வட்டமிட ஆரம்பிக்கின்றன
பலி ஒருமையிலா ? பன்மையிலா ?
கேள்விகள் முளைத்து நிற்கின்றன
நெருங்கி வருகிறார்கள்
இடையில் நான்
தொலைவில் தேவதைகள்

என் வாளின் பிடி இறுகுகிறது
தேவதைகள் கடவுளை இறுக்குகிறார்கள்
அரக்கர்கள் கத்திக்கொண்டே வருகிறார்கள்

இந்த ஆர்க்காடு வீராசாமி நல்லாவே இருக்கமாட்டான் மச்சி
காலைல இருந்து இதோட 3 வாட்டி
நிலக்கரி வாங்குனதுல பிரச்சனையாம்
டேய் ! இவன் என்னடா தூங்கிட்டுதான இருந்தான் ...
திடிர்னு பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்கான்
என்னடா ஏன் ..அப்படி பார்க்குற
டீ சாப்பிட போலாம் வர்றயா ?

சட்டையை அணிந்தபடி நண்பனிடம் கேட்டேன்...
கரண்ட் எப்ப வரும் ?
ஏன் மாமா ?

தேவதைகளும் ...அரக்கர்களும் ...காத்திருக்கிறார்கள்

Thursday, March 11, 2010

என்...


...


துண்டிக்க முடியாத எதிர்பார்ப்புடன்
கனவு உடையும் படுக்கையின் விழிப்பு
கலைந்த தேவதை -ஆடை -கலையாத உலகம்
எதிர்வீட்டுப்பெண் பார்த்த சட்டையில்லாத மேலுடம்பு
நழுவி விழும் முனை மழுங்காத சோப்பு
பொத்தான் மாற்றும் இடுக்கண் மறந்த கைகள்
இடது கால் விரும்பும் வலது கால் காலுறை
நொடிப்பொழுதில் எச்சமிட்ட திட்டமுடியா பறவை
நின்று செல்லும் பேருந்தின் ஜன்னல்வழி பார்வை
பயணிகளின் கால்களுக்குள் விழுந்து தொலையும் நாணயம்
சாலைகளை கடக்க புடைத்திடும் விரல்களின் விசை
எதிற்பட்டுவிட்ட சண்டைகளின் வேண்டா வார்த்தைகள்
அழும் பள்ளி சிறுமிக்கி பொருத்தமில்லா சமாதானம்
பிடிக்காத திரைப்படத்தின் வெற்றிப்பட சுவரொட்டி
இரண்டாம் உலகப்போரின் சிகரெட் விதிமீறல்
பகிர்ந்து குடிக்கும் கடைசி சொட்டு குளிர்பானம்
பிச்சை கேட்டவர் எதிரில் இல்லையென நிரூபணம்
கேள்வியின்றி மீதி சில்லறைக்கு பெறும் மிட்டாய்
தமிழ் சினிமா -இந்திய சினிமா-உலக சினிமா-மறுபடியும்
நண்பன் வீட்டு அழகான-பாசமான இரவுநேர தெருநாய்கள்
கவனம் கலையும் பூனைகொண்ட குழந்தையின் குரல்
எண்ணிக்கையில்லாத கற்பனையுடன் புரட்டப்படும் புத்தகம்
அனுமதியற்ற ....கண்களின் உறக்கம்
கலைந்த தேவதை -ஆடை -கலையாத உலகம்
துண்டிக்க முடியாத எதிர்பார்ப்புடன் கனவுகள்

Friday, December 11, 2009

கடல் புறா ...கதை

...
இதில் வரும் நிகழ்வுகள் கற்பனையே
ஆனால் சில தருணங்களில் கற்பனைகள்
படிப்பவரைப்பொருத்து உண்மையாகவும் தெரியலாம்


என் பெயர் கடல் புறா
உங்கள் புருவம் வளைய வேண்டாம்
என்னிடம் ஆச்சரிய குறிகள் இல்லை
என் தந்தையும் தாயும் சாண்டில்யனின்
புத்தக அலமாரியில் காதல் வளர்த்தது
என் தவறில்லை
தவறு சாண்டில்யனிடம்
ஆம்
எதிரியாக கல்கியை பாவித்துக்கொண்டது
எங்கள் வீட்டிற்க்கு நேரெதிர் கல்கிவீடு
அங்குதான் என் காதலி ....
எங்கள் பருவவயது ஒன்றுதான்
அவள் பெயர் சிவகாமி
தொட்டால் வெட்கத்தில் இன்னும் வெளிர்ந்து
வெள்ளையாகிவிடும் வெள்ளை நிறமவள்
அவளை நான் சந்தித்த தருணம்
புறாக்களின் ஒழுக்கம் கற்றுக்கொண்ட தருணம்

ஒருநாள் என் வீட்டில்
அதாவது சாண்டில்யனின்
என்வீட்டில்
கோபுர மாடத்தில் அமர்ந்து
பாதையில் வருவோர் போவோரின் குறிப்பிட்டவரின் மீது
எச்சமிட்டு ரசித்துக்கொண்டிருந்தோம்
சாண்டில்யன் இதை மெய் மறந்து பாராட்டியபடி
தானியங்களை இட்டுக்கொண்டிருப்பார்
ஏனென்றால் அவர்களனைவரும் கல்கியின் ரசிகர்கள்
அவர் திட்டப்படியே நாங்கள் செய்துகொண்டிருந்தோம்
எச்சம் பட்ட மனிதர்கள் முகபாவனையை
ஒளிந்துகொண்டு விரும்பி ரசிப்போம்
அப்போது
ஒரு கோபம்கூடிய இரக்கக்குரல்
ஏன்.. இவ்வாறு ? '' புறாமதி தவறி பிழையிழைக்கின்றீர் ''
அதுதான்
முதன்முதலில் அவளை நான் சந்தித்த தருணம்
புறாக்களின் ஒழுக்கம் கற்றுக்கொண்ட தருணம்
இதைசொல்லிவிட்டு அவள் பறந்து சென்றுவிட்டாள்
அதன்பின் நான் கோபுர உச்சிக்கே செல்லவில்லை

அவளை சந்தித்து மன்னிப்புகோர நினைத்தேன்
மாமல்லபுர புத்தகத்திருவிழாவில் மறுபடியும் அவளை சந்தித்தேன்
அவளுடைய தோழிகளிடம் பேசியபடி
ஒரேகல்லில் செய்த யானையின் மேல் அமர்ந்தோ தவழ்ந்தோ இருந்தாள்
எப்படி பேசுவது என்று தெரியவில்லை
சாண்டில்யனின் விசிறிகள்வேறு என்னைச்சுற்றி
திடிரென்று அவளை நோக்கி பறந்தேன்
அனைவரும் திடுக்கிட்டு கவனிக்க
என் வேகத்தை கூட்டியிருந்தேன் ...
கலவரம் நிகழுமென எச்சரிக்கையாக கொண்டுவந்திருந்த
கற்களை வாயில் கவ்வத்தொடங்கினர் அனைவரும்
அவளை நோக்கி பறந்தபடியே அவள் முகத்தை கவனித்தேன்
அப்படி ஒரு படபடப்பை அந்த புறாமுகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தாள்
அவளை நெருங்கிய நான் யாருமறியாமல்
அவள் மட்டும் அறியும்படி ஒரு செயலை செய்துவிட்டு
மலைகுகை மாடத்தில் வந்தமர்ந்தேன்


'''

சாண்டில்யன்
''கடல்புறா குறும்புக்காரன்
என்று சொல்வது என் புறக்காதில் விழுந்தது

கல்கியை கவனித்தேன்
அவர் சாந்தப்புன்னகையுடன் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்
பொன்னியின் செல்வன் தந்தவரின் மேன்மையை அன்றுதான் கவனித்தேன்
என்ன எழுதுகிறார் என்று கவனிக்கையில்
என் கண்ணுக்கு
'' பொய்மான் கரடு '' என மங்கலாக விளங்கையில்

வந்து விழுந்தது அழகிய சிறகு ஒன்று
அருகில் அவள்
என்னிடம் பேச்சில்லை மன்னிப்பு வைத்திருந்தேன்
என் உடல் நிலை இழைத்தது பற்றி கேட்டாள்
என்னை கவனிக்கிறாள் என்ற சந்தோசத்தில்
என் புறா உடல் சிலிர்த்துக்கொண்டது
இப்போது மாடத்திற்கு சென்று
மனிதர் ஆடு மாடு நாய்களின் மேல் எச்சமிடுவதில்லை
உணவும் கிடைக்கவில்லை
என் உடல் மெலிந்த காரணம் அவளை
புறாக்கண்ணீர் வடிக்க வைத்தது ...
கூடவே நான் குழந்தைகளின் மேல் எச்சமிட்டதேயில்லை
குழந்தைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னது
அழுத அவளை மிகப்பெரிய புறாசிரிப்பு சிரிக்கவைத்தது

நாங்கள் பழக ஆரம்பித்தோம்
அவ்வப்போது முத்தங்களும்
எங்கள் சந்திப்புகள் அதிகரிக்க
என் சிறகுகள் குறைய ஆரம்பித்தன
அனைவருக்கும் சந்தேகம் வர ஆரம்பித்தது
என் காணாமல் போன சிறகுகள் பற்றி
விசாரணை நடக்க
சாண்டில்யனிடம் என் காதலை ஒப்புக்கொண்டேன் ...
கோபப்பட்டு என்னை கொன்றுவிடுவார் என்று எதிர்பார்த்தால்
தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் ...

உடனே
தனது உதவியாளனை கூப்பிட்டு
'' புறாவின் காதல் முன் மற்றவை ஒன்றுமில்லை '' இதுவே கதைக்கான களம்
''கடல்புறாவின் காதல் '' இதுவே கதைக்கான தலைப்பு என்று கூறிவிட்டு
என் கைரெக்கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு
கல்கியின் முன் நிறுத்தினார் . ..

அடுத்தநொடி என்னை மறந்து
அவர்கள் சமாதானமாகி ஒருவரை ஒருவர் கட்டிக்கொள்ள
நான் என் புறாவைத்தேடி
எங்கும் கண்படாமல் ஏமாற்றமுடன் அவர்கள் முன் நிற்க
கல்கி நடந்தவற்றை கூறினார் ...

சற்று நேரத்திற்கு முன்னர்தான்
மேலைசாளுக்கியப் புறாக்கள் அவர்கள் நாட்டிற்க்கு
என் சிவகாமியை கடத்திசென்றதாக ...
நீ பன்னிரெண்டு வருடங்கள் காத்திருந்து
படையெடுத்து சென்றால் அவளை மீட்டு வரலாம் ...
அதுவரை அவள் உனக்காக சபதமிட்டு காத்திருக்கலாம் என்று
அவர்கதையின் முடிவை என் மேல் திணிக்கப்பார்க்க...
சாண்டில்யனும் அதை ஆமோதிக்க...

...


கதையின் இறுதியில் பொய்யை புனையும் எழுத்தாளர்களின்
அறிவுரையை கேட்க்காமல் உடனே கிளம்பி வந்தேன்
வழியில்
வேடனின் வலையில் மாட்டிக்கொண்டேன்
வேடனிடமிருந்து தப்பிக்க வலையோடு பறந்தேன்
அப்போது
''புத்தம் சரணம் கச்சாமி '' என்ற குரல் கேட்டது
உங்களை கண்டேன் ...
உங்கள் முகத்தில் அன்பு தவழ்ந்தது
கண்டிப்பாக நீங்கள் இலங்கையை சேர்ந்த புத்தபிச்சுவாக இருக்கமாட்டீர்கள்
என்ற நம்பிக்கையுடன் என் கதையை முழுவதுமாக கூறிவிட்டேன் ...
வேடன் வருவதற்குள் இந்த வலையை எடுத்துவிட்டு
என் புறாவை தேடிச்செல்ல வழி கொடுங்கள் அய்யா

அந்த புத்தபிச்சு அர்த்தமுடன் மெல்ல புன்னகை செய்தார்

.........................

பின் குறிப்பு -

ஒரு புறாவால் அத்தனை பக்கங்களை புரட்டி
கடல் புறாவையோ
சிவகாமியின் சபதத்தையோ
படிக்கமுடியவில்லை
ஆம் என்னைத்தான் சொல்கிறேன்
என் ஐயமெல்லாம்
கடல்புறா கரையேறுமா
சிவகாமியின் வழியில் வரும் புத்தபிச்சு நல்லவரா
இவ்வளவு தூரம் என்னுடன் வந்தீர்களே ஏதாவது புரிகிறதா
யாராவது ஏதாவது சொல்லுங்க வேடன் வருவதற்குள்

Monday, November 16, 2009

எனக்கு வேணும் இன்னமும் வேணும் இதுக்குமேலயும் வேணும்

.....


அடால்புக்கும் ...அமீனுக்கும்
அன்னை தெரசா
"டேய் !குட்டி பசங்களா ''
என்று
கேசம் கோதியிருக்க வேண்டும்




யாருமன்றி இறக்கும் ஆப்பிரிக்கனைவிட
அனைவருமிருந்து இறக்கும் ஈழத்தமிழன்
இழக்கும் உயிரில் சிலவனவாது
தமிழ் கொண்டு ஏமாற்றி சுகிப்பவர்க்கு
மனித பிழம்பாக தர வேண்டும்




இஸ்ரேல் பாலஸ்தீன பிஞ்சு மழலைகளின்
சிதறிய சதைப்பிண்டங்களின் செல்களிலாவது
ஈரமிருந்து
இல்லாத
கடவுளையும் மனிதனையும் சேர்த்து எரித்து
அமீபாவாகவே திரும்பவும் மாறவேண்டும்




இது என்ன இது வம்பாகிவிட்டதே,
"என் பிள்ளைகள் விரைவில் என்னையே
எரித்து விடுவார்கள் போலவென "
கருணைகொண்டு தன்னைத்தானே வெடித்து சிதறி
இனிமேலாவது இயற்கையோடு வாழுங்களென
சூரியத்தாய் புதுபூமி தரவேண்டும்




ஷேக்ஸ்பியர் கதையில் முற்றில்
தன்னை மாய்த்துக்கொள்ளும் தேவதை
கொஞ்ச தூர
அரசமரத்தடியில்
நாய் ,சரக்கு ,தாடியுடன் தனியே
அமர்ந்திருக்கும் தேவதாஸை கண்டிருந்து
ஒருவருக்கு இருவராயிருக்க வேண்டும்




"விநாயகருக்கு இந்த ஒடக்கான்
என்ன பண்ணுச்சி தெரியுமா
குடிக்க தண்ணி கேட்டப்ப "...
என் வேட்டைக்காலங்களில் என்னோடு
ஏய் வேணாம்ப்பா ...
பாவம்ப்பா என்று
அந்த ஒடக்கானை ஓடவிட்டு ...
என் கோபத்திற்கு
என் ஓட்டை டவுசரையே காரணமாய் கொண்டு
கேலிகளை
வெட்கச்சிரிப்போடு சிதறிவிட்டு
காணாமல் போன
என் ஏழுவயது தோழி ரமா
அப்படியே திரும்ப வேண்டும்




நாங்கள் ராஜ குடும்பத்தினர் ...
காட்டிலிருந்து வழிமாறிவந்துவிட்டோம்
எங்களை எப்படியாவது கொண்டுபோய்
காட்டில் விட்டுவிடுங்கள் என்று
என் கனவில் அடிக்கடி வந்து
கெஞ்சும் சிங்கங்கள்
நேரில் வர வேண்டும்




என் கனவுகளோடு என்னை
முழுமையாக உறங்கவைத்து
சிணுங்கிய வெப்பத்தோடு
இறுக்க அணைத்து
பார்த்து ரசித்து விழித்திருக்கும்
தேவதைகள்
என் போர்வையை விலக்கியவுடன்
காணாமல் போகாமல்
புன்னகையோடு
"எங்கயும் போலடா குட்டி"
இங்கதான் இருக்கிறோம் ...என்று
நெற்றியில் முத்தமிட்டு தலைகோத வேண்டும்




என் எண்ணம் எழுத்து இயக்கம்
என்று இருந்து
மற்றவர்க்காக
என் சிந்தனைகளை அடிமையாக்க இராமல்
காயப்பட்டு
காயப்பட்டு
காயப்பட்டு
என் எண்ணங்களை கொன்றுதீர்க்காமல்
என்னைவிட்டு விலகிச்சென்று கொண்டிருக்கும்
என் சினிமா எனக்கு வேண்டும்



........



என் புதுமைகளின் ....

ஆ ........என்ன விடு !

யார் நீ ?...எதுக்கு தடுக்கற ?
.
எனக்கு வேணும் ...இன்னமும் வேணும் ...இதுக்கு மேலயும் வேணும்

நான் பைத்தியம் இல்ல

அந்த ஊசிய பக்கத்துல கொண்டுவராத

என்ன விடு ...நான் இன்னும் அத முடிக்கவே இல்ல

ஷைன் அவுட் பண்ணாத

எனக்கு பின்னூட்டம் பண்ணுவாங்க

ஆ ...வேணாம் ....ஊசி வேணாம்

........ம்

எனக்கு வேணும்...ம்

இன்னமும் வேணும் ...ம்

இதுக்கு மேலயும் வேணும்

Sunday, November 15, 2009

நான்...

அவள் விரும்பும் திரைப்படம்.....

அவள் நகங்கள் நான் கடித்ததில்லை .....
அவள் பாதத்தில் என் இதழில்லை ...
அவள் தூசிகள் நான் ஊதியதில்லை ...
அவள் மச்சங்கள் நான் எண்ணியதில்லை ...
அவள் கூந்தல் நான் துவட்டியதில்லை .....
அவள் கோபம் நான் குழந்தையில்லை ...
அவள் வெட்கம் நான் தொடவில்லை ...
அவள் பேச்சு நான் முயற்சிக்கவில்லை ...
அவள் புகைப்படம் நான் சேகரிக்கவில்லை ...
அவள் பெண்மை நான் அடிமையில்லை ...
அவள் கவிதை நான் பேனா ... எழுதிக்கொண்டே ...
அவள் cindrella ...நான் cindrellaman...

தேடுகிறேன் ...
மேகத்தில் ... தூக்கத்தில் ... தொலைவில் ...
அவள் விரும்பும் திரைப்படம் ...

நீ...

உன் தொடக்கம் என் உலகம்
என் அழுகை உன் உயிர்ப்பு
உன் தீண்டல் என் நடனம்
என் குறும்பு உன் புன்னகை
உன் சுவாசம் என் முத்தம்
என் அனுபவம் உன் காதல்
உன் கோபம் என் பயணம்
என் வெற்றி உன் கண்ணீர்
நான் cindrellaman ...நீ...என் cindrella...

அவளைப்பற்றி சொல்கிறேன் ...

எங்களின் முதல் சந்திப்பு .....

எனக்கு கவிதை எழுத ...
சுடுகாடு பிடிக்கும் ...
அன்று ஒரு குழந்தையின் கல்லறையின் முன் அமர்ந்து ...
காமத்தில் முத்தம் வரியிட முயன்றேன் ....
வார்த்தைகள் தடை ...
எறும்புகள் வேறு கடிக்க ....அடுத்த கல்லறையின் முன் ...
அமர்ந்து எழுத என்னால் காமத்தை சுமக்க முடிந்தது ....
அந்த கல்லறை மனிதரின் வயது 1900 - 1989 என்று ...
பொறித்து அழிந்திருந்தது ...
அந்த மனிதர் சிறந்த தலைவியை அடைந்திருப்பார் என்று...மகிழ்ந்து சிரிக்க ... அடுத்து கல்லறைக்கு ஒரு கூட்டம் நுழைந்தது ...
அவர்களின் சோகம் என்சிரிப்பை மறைத்துக்கொண்டேன் ...
அந்த கூட்டத்தில் ...
ஒரு பெண்.... sorry இளம் பெண் ....மறுபடியும் sorry அழகான இளம் பெண் ...
அழுது வீங்கி அழுதுகொண்டிருந்தாள் ...
அனைவரும் அவளும் இறந்தவரை பார்க்க ...
நான் மட்டும் அவளை பார்த்துக்கொண்டிருந்தேன் ...
அனைவரும் கிளம்ப அவள் மட்டும் அங்கேயே இருந்தாள்...
அழுதுகொண்டிருந்தாள் ...அவளிடம் பேச முயற்சித்தேன் ...
முதலில் நான் மனிதன் தானா?...என்பதில் உறுதியாக இருந்தாள்...
5 நிமிடங்களுக்கு பிறகு ...
என் கவிதை அனுபவங்கள் அவளை இயல்பாக்கின ....
அவள் உதடுகள் ஈரமாக ...இருந்ததினால் மெல்லிய வடிவில் பேசினாள்...
இருவருமே பேசினோம் ....என்கவிதைகளை வாசிக்க கேட்டாள்....


எங்களின் காதல் ....

என்னை வாசிக்க ஆரம்பித்தாள்...
அவளை ரசிக்க ஆரம்பித்தேன் ...
இந்த கவிதையில் தவிர ...
இதை படிக்கும் உங்களை தவிர ...
அங்குள்ள கல்லறைகளை தவிர வேறு யாருக்கும் தெரியாது ...
ஒரு கவிஞ்சன் சுடுகாட்டில் தன் தலைவியை சந்தித்தான் ...
அவளின் முதல் முத்தத்தை அங்குதான் ஏந்தினேன் ...
முதலில் அவள் சம்மதிக்கவில்லை ...
பேய்களின் முன் முத்தமா ?...
நாம் காதலர்கள் என்று தெரிந்தால் பேய்கள் நம் அருகில் வரா ...
நான் கொடுக்கட்டுமா ...நீ இடுகிறாயா ...
இப்போது பேய்களை விடுத்து ...
வெட்கத்தை எடுத்துக்கொண்டாள்...அதன் பின்னர் ...
அவளிடம் முத்தங்கள் ...கேட்பதே இல்லை ...ஏனென்றால்
அவளிடும் முத்தங்களின் ஈரம் காயும் முன்
அடுத்த முத்தங்கள் பிறந்துவிடுவதால் ....
வெட்கத்தை நான் எடுத்துக்கொண்டேன் ...


எங்களின் தாய்மை ...

முதல் முறையாக என்னை விடுத்து இன்னொரு உயிர்க்கு ...
அதே காதலுடன் முத்தமிட்டாள்...
அதே ஈரத்துடன் ...என்னையும் முத்தமிட்டாள் ...
என் தாய் இறக்கவில்லை என்றேன் ...
போடா ! என்றால் ....
நான் அழுதேன் ....தலை கோதினாள்...
உன் பிரசவ வலி தெரிந்திருந்தால் நான் இதற்க்கு மறுத்திருப்பேன் என்றேன் ...
அவள் என் தாயை உணர்ந்தேன் என்றாள்....
சிரித்தோம் ...
எங்கள் குழந்தை அழுதது ....
எங்கள் மூவர் உதடுகளிலும் ஈரம் இருந்தது ....


எங்களின் முதுமை ...

நாங்கள் இருவருமே குழந்தையானோம் ...
ஷேக்ஸ்பியரின் 7 வது stage இல்இருக்கிறோம் என்றேன் ....
அவள் அதை நம்பியதே இல்லை ....
என்னை முதன் முதலில் சந்தித்த
அந்த சுடுகாட்டில் அமர்ந்து என்னுடைய கவிதைகளை
இப்போதும் வாசித்துக்கொண்டிருப்பதாக கூறுவாள் ...அதன் பின்
நான் கவிதைகள் எழுதுவதே இல்லை ...
அவளுடன் நானும் வாசிக்க தொடங்கினேன் ...
அவளை ....ஒரு பெண் sorry இளம் பெண் மறுபடியும் sorry அழகான இளம் பெண் ...
அழுது வீங்கி அழுதுகொண்டிருந்தாள் ...
அனைவரும் அவளும் இறந்தவரை பார்க்க ...
நான் மட்டும் அவளை பார்த்துக்கொண்டிருந்தேன் ...
அன்று ஒரு நாள் என் உடல்நலம் சரியில்லை ....
முத்தங்களையே மருந்தாக இட்டுகொண்டிருந்தாள்
மறுநாள் ....எனக்கும் தெரியவில்லை ...அவளும் நம்பவில்லை
நான் இறந்து விட்டதாக மற்றவர்கள் கூறுவது ...


நாங்கள் மட்டும் ...முழுவதும் தெரிந்ததினால் நீங்கள் மட்டும் ....



இதுவரை அவளைப்பற்றி அனைத்தையும் கூறிவிட்டேன் ....
அவள் வரும் நேரமாகிவிட்டது ...
அதே சுடுகாடு ...
என் கல்லறையில் அமர்ந்து இருக்கிறேன் ...
அவள் தூரத்தில் பூக்களோடு வருகிறாள் ...
அவள் கையில் என் கவிதைகள் ...
என் கல்லறையில் அமர்ந்து என் கவிதைகளை வாசிக்க தொடங்கினாள்...
அவளுடன் நானும் வாசிக்கதொடங்கினேன் ...
அவளை ....ஒரு பெண் sorry இளம் பெண் மறுபடியும் sorry அழகான இளம் பெண் ..

உன்னை நோக்கி முத்தங்கள் வீசப்படும்

பிடிக்கவில்லையா ...என்னை மட்டுமா ...அனைவரையுமா...
என் கண்களை அழ வைக்கிறாய் ...
ஏன் மௌனம் ...நீயும் அழுகிறாயா ...
என் முத்தங்கள் வீசுகிறேன் ..கண்ணீரை அடை...
முடியாதா...இரு இதை படிப்பவர்களையும் அழைக்கிறேன் ...
இப்போது சொல் ...
நீ சொல்வதை நான் அவர்களுக்கு சொல்கிறேன் ...அனைவரும் கேட்கட்டும் ....

படிப்பவர்கள் கேட்கிறீர்களா ?....

உன்னில் பாட்டியும் ..முயலும் நாங்கள் தான் வைத்தோம் ...
ஒ ' நீதான் அவர்களை பார்த்துக்கொள்கிறாயா....
மலை மேல ஏறி வா ....மல்லிகைப்பூ கொண்டு வா ... ம் ' அது குழந்தைகளுக்காக ...
ஒ ' நீ அதற்காக தினமும் முயற்சி செய்தாயா ...
அமுதே ...கண்ணே ...அது காதலர்க்காக ....குழந்தைக்கு உணவூட்ட ...
எங்களை இருள் மூழ்காமல் இருக்க நீ தேய்ந்தாயா ....

ஏய் ! ...அழுவாதே ...
இதைப்படிப்பவர்கள் கேட்கிறார்கள் ...
அவர்களிடம் நீ கேட்பதுபோல ஒரு வினா கேக்கட்டுமா ?
...ம் ' சரி ..
இதை படிப்பவர்கள் கடைசியாக எப்போது என்னை பார்த்தீர்கள் ?

நீ சொல்வது உண்மைதான் ...ஒரு சிலர்தான் பதில் சொல்கிறார்கள் ...
கடவுள் என்று சொல்லப்படுபவர் கூட தவம் , பூசை ,
திருவிழா பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் ...
ஆனால்
நீ ! நேரில் வருகிறாய் ...எங்களுக்காக தேய்கிறாய் ....
உன்னை பலவாறு பயன்படுத்துகிறோம் ...
காலச்சூழ்நிலை மாற மாற ...நீ புத்தகத்தில் மட்டும் ...மனதில் இல்லை ....
உன்னை பார்ப்பவர்கள் மறைந்து போகவில்லை ...
அதே வேளை மக்கட்தொகையும் ...ம் ' ஹும்
உன் கோபம் நியாயமானது ....ஆதரவளிக்கிறேன் ....
இதே படிப்பவர்களும் அளிப்பார்கள் ...
நீ நண்பன் ...காதலி ...தாய் ....தெய்வம் ...குழந்தை ...கோள்....
உன்னை நோக்கி முத்தங்கள் வீசப்படும் ....கோபம் கொள்ளாதே ...

நீங்கள் கேட்டவை ...

வரும்வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனைய ...
முகிலெடுத்து முகம்துடைத்து விடியும்வரை நடைபழகு ...
வானவீ .... வேறு பாடலா?...சரி ...
கம்பன் ஏமாந்தான் அவன் இளம் கன்னியரை ஒரு ...
கூடாதா ... சோகமா ?...
வைரமுத்து ...வாலி ...
உயிரோட்டம் வேண்டுமா ?...
கண்ணதாசன் ?...
வார்த்தையில் கவிதை வர வேண்டுமா ?
நீர்விடுகிறாயா ...நிழல்வளர்க்கிறேன்...
குழம்பாதே ...தொடர்பிட்டுக்கொள்...
நீ......நீர்.....காற்று.....மேகம்......ம
ழை........விவசாயி......நான்
..........ம் "

தந்தனத்தத்தன தைய்யனத்தத்தன தானன்னதத்தன தானத்தய்யன தந்தானா
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

லல்லலள்ளலள்ள லாலலள்ளலள்ள லலளலாள லாலலள்ளல லாலாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

தன்னானா ....சந்தங்கள்
னனன்னா ...நீயானால்
ரிசரி .... சங்கீதம்
லாலாலா ... நானாவேன்

வார்த்தையில் கவிதையில்லை
ரசனையின் வீணை மீட்டு
கண்டுபிடி கண்டுபிடி கண்டுபிடி ...
குழம்பாதே ...தொடர்பிட்டுக்கொள்...
கற்பனை ...ஓவியம் ...சருகு...இலையுதிர்க்காலம் ...
மூங்கில் ...விஸ்வநாதன் ...இளையராஜா...
கண்டுபிடித்துவிட்டேன் ....
எங்கே பார்க்கலாம் ?
மயக்கம் தந்தது யார்? ...தமிழோ?...அமுதோ? ...கவியோ?...
சிறப்பு ...நீ மெய்யான ரசிகன் ...
ம் "?
இன்று போதும் உணவிட்டுக்கொள்...
கவிதை தீர்ந்துவிட்டதா ?
நிலவு நிறைய கவிதைகள் உண்டு ...
விஸ்வநாதன் ... இளையராஜா ?
என் ஏவலுக்கு கட்டுப்பட்டால் ...
புன்னகை செய் ...
ம் '...
இசை செவிலிகள் கவனிக்கலாம் ...
கவிதையில் களைத்துவிட்டான்...

யாரது? ...என் அப்படி பார்க்கிறீர்கள் ?
அரை நாளிகை...ஒன்று கேக்கலாமா ?...
நீங்கள் ....?
இதுவரை கவனித்தவன் ...
அப்படியென்றால் நிச்சயமாக ...
பாடியவர் ...?
விஸ்வநாதன்... இளையராஜா.... பைத்தியக்காரன்...
புரியவில்லை ...?

கால் நொடி கவனியுங்கள் ...உணர்கிறீர்களா?

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே ...
மேலாடை மூடியே ஊர்கோளமாய் போவதேன் ...

பாட ஆரம்பித்துவிட்டான் பைத்தியக்காரன்..

அவர்கள் சூரியனென்றால் ...இவன் பூமி
இவன் காதல் சுற்றுதான் ...

நீங்கள் கேட்டவை...

என் சினிமாவும்,அவள் சுக்கு காப்பியும்...சுவை

கிமு . 1330 ஆம் வருடம் ரஷ்யா

இரவெல்லாம் மக்கள் வெளிவரா பனி
அதிகாலை ஒதுங்கிய ...டைட்டானிக் கப்பல்
சிரிப்புடன் சிறுகுழந்தை
ரஷ்ய மொழிகளில் பலவாறு புரளி
நெற்றியில் மச்சம் இவன் குந்தியின் மைந்தன்
லியார்ணடோ டி காப்ரியோ / கேட் வின்ஸ்லெட் சன்
இந்த கப்பல் ...கடல்புறா... இளையபல்லவன்
சேகுவேரா பொலிவிய பயணம்...அவர் மகனோ !
நகர்முழுதும் புழுதியாகின புரளிகள்
மன்னர் விளாடிமிர் புடின் யானைவலம்
வளர்க்க ஆணை ... பெயரின்றி குழந்தை
குறும்புகள் அவன் ...அடிமை மற்றவர்கள்
கடலோரம் விளையாட ...கடல்சாமி கண்டான்
அவர் அவன் பெயர் கேட்டார் ...கண்டுபிடிக்கப்படவில்லை
அவன் அவர் பெயர் கேட்டான் ...கொலம்பஸ்
உங்களோடு வரட்டுமா ?...பெயர் கொண்டு வா !
இல்லையே ...இன்றிலிருந்து நீ கடல்மைந்தன்
அவரோடு பயணம் ...


கிமு 1334 - 1566

கடல் பயணம் நெடுந்தொலைவு ...
அனைவரும் துயில ...கடல்மைந்தன் கப்பலோட்டி
புறாக்கள் பறந்தன... தீவை நெருங்கினர்
மேலாடையின்றி ...அழகான செவ்விந்திய பெண்கள்
புலிகளை முறத்தால் அடித்து மேய்த்து சென்றனர்
உற்சாகமிட்டான் கண்டேன் அமெரிக்கா
ஒலிகேட்டு ஒளிபார்த்து ஒலிகொண்டார் கொலம்பஸ்
துயில் முறித்து முறைந்தார்...கண்டேன் இந்தியா
கடல்மைந்தன்... கண்டேன் அமெரிக்கா
சுதாரித்தது ...கொலம்பஸ்
அமெரிக்காவை கண்டேன் ...கண்டுபிடித்தேன் ...மார்தட்ட
வரலாறு...அமெரிக்காவை கண்டது கொலம்பஸ்
சூழ்ச்சியறிந்தான் கடல்மைந்தன்....உணர்ந்தான்
ஒரு மதிப்பெண் வினா... தன் பெயர் இல்லை
வராத பெயர் மரியட்டுமென்று தூக்கிஎறிந்தான்
கடல்மைந்தன் பெயரை ...விலகினான் கொலம்பஸை

21284 நாட்கள் தூங்கிகழிந்தான்

"பயிறேட்ஸ் ஆப் கரீபியன்"கப்பல்வர...பயணம்
தளபதி ஜானி டெப்...அதன் கொள்ளைகளை விவரித்தான்
பெயர் கேட்டு இல்லையென்றதும் தங்கப்பட்டை பரிசு
பரிசின் அடையாளம் ஸ்வஸ்திக் சின்னம்
இந்தியக்கப்பலில் கொள்ளையடித்ததாம்...
ஆஸ்திரியா -வியன்னா எல்லையில் விட்டுச்சென்றான்
கூர்ந்த வேகத்தில் சந்திப்பு ...5அடி 4அங்குலம்
மேகத்தை வரைந்துகொண்டிருந்தான் தனியொருவன்
பெயர் கேட்டால் அடால்ப் ஹிட்லர்
எனக்குபெயர் இல்லையென்றேன் சிரித்தான்
உனக்கு என்ன அடையாளமென்றான்...ஒன்றுமில்லை
கோபப்பட்டான் ...
வரலாறு சிப்பாயை நினைவுகொள்ளா...அரசனாகு
அரசன் ... நல்ல யோசனை
என்னை ஓவியமாக தந்தான்...ஸ்வஸ்திக் தந்தேன்
உன் அடையாளம் ...முதலில் ஜெர்மனி பின்பு உலகமென்றான்
ஹிட்லர் விலக அடக்கிவைத்திருந்த மீசையின் சிரிப்பு
அந்த ஓவியத்தை மீதும் பார்த்தேன்
எனக்கு நானே அழகாகி... ஹிட்லரின் தூரிகை
ஹெயில் ஹிட்லர் தூரத்தில் சென்றவன் ...திரும்பிப்பார்த்து
அர்த்தத்துடன் புன்னகைத்தான் ...



200354 மணி நடை

புத்தர் கோவில் ...
ஒரு பெண் ,இரண்டு எறும்புகள்... பலியிட தாலிபன்ஸ்
தடுத்தேன் ...நீ யார்
ஹிட்லரின் நினைவு ...அரசன்
பயங்கொண்டனர் ...புகைந்த காரணம் உணவு பஞ்சம்
சக்கரையிட்டு எறும்புகளை வளர்க்கமுடியா சூழல்
அந்தபெண் ....அவள் கடல்வழியே பேழையில் வந்தாள்
நான்... அவள் ...எறும்புகள் நடக்க ஆரம்பித்தோம்
கரும்பு காடு... நன்றி சொல்லி பிரிந்தன எறும்புகள்
அவள் பெயர் கேட்டேன் சின்றல்லா
என் பெயர் கேட்டாள் சின்றல்லாமேன்
1500 நொடிகளில் கந்தர்வமணம் ...
எதிரே புத்தர் ...ஆசையை துற
உங்களுக்கு யசோதரா ...நீங்கள் சிந்திக்கவில்லை
எனக்கு சின்றல்லா ...நான் சிந்திக்கிறேன்
ஆசை வைத்து என்ன செய்ய போகிறாய்
ஆசையை துறந்து என்ன சாதித்தீர்
ஸ்ரீலங்கா பக்கம் போய் பாருங்கள் உங்கள் புதல்வன்களை
நான் கடவுள் ஆகா விரும்பவில்லை ...வருகிறோம்

கி பி 1934

பிரான்சை அடைந்தோம்
வழியில் நாஜிபடை ...சிறைபிடிப்பு
மரண தண்டனை ...காரணம் யூதர்கள்
சிங்களனை விட ஜெர்மானியன் மோசம்
எங்கள்மேல் விசவாயு பாய்ச்சும் முன் ...ஹெயில் ஹிட்லர்
நானும் ஹெயில் ஹிட்லர் ...குழப்பமானார்கள்
ஹிட்லருக்கு புறாதூது ... உடனே வந்தான்
கட்டிப்பிடித்தான் ...நான் விரும்பவில்லை
ஸ்வஸ்திக் கட்சி சின்னம்
இந்தியன் ஏர்லைன்ஸ் ...அவனுடைய செலவு
எகிப்து வழி பயணம் ...வந்தது செய்தி
நேச நாடுகள் வெற்றி ... ஹிட்லர் தற்கொலை
எகிப்துபடை வளைக்க... அரசியின் முன்
யார் நீங்கள்? இவள் சின்றல்லா.... நான் சின்றல்லாமேன்
நீங்கள் யார்? நான் கிளியோபட்ரா
தண்டனை ? மரணம்
வேறு வழி ...ஒரு வழி ...என்ன ?
என்னை திருமணம் செய்ய வேண்டும்
நான் சின்றல்லாமேன்
மரண தண்டனை நிறைவேறட்டும் ...


ஆ ...ஆ ...என்ன இது ...அவள் சொன்னாள்...ம் "..சூடு

ஆ ...ஆ ...என்ன அது ...நான் சொன்னேன் ...ம் "...கனவு

சூடு ...? ம் "..சுக்கு காப்பி

கனவு ...? ம் "...என் சினிமா...

அவளுக்கு தெரியாது ...பிறகு சொல்லிக்கொள்கிறேன்

உங்களுக்கு புரிந்ததா ....

என் சினிமாவும் ...அவள் சுக்கு காப்பியும்... சுவை