Sunday, November 15, 2009

நீ விரும்புகின்ற பொய்...

சரி !

சொல்லட்டுமா ?


என் கவிதைகளும்
உன்னை விரும்புகின்றன ...

என் அம்மாவுக்கும்
உன்னை பிடித்திருக்கிறது ...

என் நாய்க்குட்டிக்கும்
உன் வாசம் அறிமுகமாகிவிட்டது ...

என் சட்டைகளை போடுவதில்லை
தங்கைக்கும் பிடித்துவிட்டது ...

புகையிலை அணைப்பானை
வெளியே வீசிவிட்டார்
என் அப்பாவுக்கும் பிடிக்கிறது ...

பொறுமையும்
கூடவே
நெற்றிப்பொட்டும்
என் கண்ணாடிக்கும் பிடிக்கிறது ...

உன்னைத்தேடி
வெகுதூரம் வரவேண்டாமாம்
என் கனவுக்கும் பிடிக்கிறது ...

என் தனிமை உணர்ந்ததால்
இயல்பாகிறது
என் கட்டிலுக்கும் பிடிக்கிறது...

கண் மூடி
மண் மூடி
போகும்வரை
என் பசலை நோய்
இதற்குமேல் சொல்லவேண்டாமா ?
போதுமா ?
ஏன்?

சொல்வதெல்லாம் உண்மையா ?
அப்படியென்றால் நீ சொல் ?
மாட்டாயா ?
வெட்கம் தின்கிறதா ?
என்னை தின்னவில்லையே ?
நீ விரும்பிய பொய்யா ?

போடாவா ?

ஏன் அப்படி பார்க்கிறாய் ?
ஏன் நெருங்குகிறாய் ?
முத்தமிட போகிறாயா ?
அப்படியென்றால் பேச மு ....

No comments:

Post a Comment