...
துண்டிக்க முடியாத எதிர்பார்ப்புடன்
கனவு உடையும் படுக்கையின் விழிப்பு
கலைந்த தேவதை -ஆடை -கலையாத உலகம்
எதிர்வீட்டுப்பெண் பார்த்த சட்டையில்லாத மேலுடம்பு
நழுவி விழும் முனை மழுங்காத சோப்பு
பொத்தான் மாற்றும் இடுக்கண் மறந்த கைகள்
இடது கால் விரும்பும் வலது கால் காலுறை
நொடிப்பொழுதில் எச்சமிட்ட திட்டமுடியா பறவை
நின்று செல்லும் பேருந்தின் ஜன்னல்வழி பார்வை
பயணிகளின் கால்களுக்குள் விழுந்து தொலையும் நாணயம்
சாலைகளை கடக்க புடைத்திடும் விரல்களின் விசை
எதிற்பட்டுவிட்ட சண்டைகளின் வேண்டா வார்த்தைகள்
அழும் பள்ளி சிறுமிக்கி பொருத்தமில்லா சமாதானம்
பிடிக்காத திரைப்படத்தின் வெற்றிப்பட சுவரொட்டி
இரண்டாம் உலகப்போரின் சிகரெட் விதிமீறல்
பகிர்ந்து குடிக்கும் கடைசி சொட்டு குளிர்பானம்
பிச்சை கேட்டவர் எதிரில் இல்லையென நிரூபணம்
கேள்வியின்றி மீதி சில்லறைக்கு பெறும் மிட்டாய்
தமிழ் சினிமா -இந்திய சினிமா-உலக சினிமா-மறுபடியும்
நண்பன் வீட்டு அழகான-பாசமான இரவுநேர தெருநாய்கள்
கவனம் கலையும் பூனைகொண்ட குழந்தையின் குரல்
எண்ணிக்கையில்லாத கற்பனையுடன் புரட்டப்படும் புத்தகம்
அனுமதியற்ற ....கண்களின் உறக்கம்
கலைந்த தேவதை -ஆடை -கலையாத உலகம்
துண்டிக்க முடியாத எதிர்பார்ப்புடன் கனவுகள்

அருமையான படைப்பு வெற்றி.... வரிகள் ஒவ்வொன்றும் பல தளங்களுக்கு இழுத்துச்செல்கின்றன.....
ReplyDeleteபிச்சை கேட்டவர் எதிரில் இல்லையென நிரூபணம்...
கேள்வியின்றி மீதி சில்லறைக்கு பெறும் மிட்டாய்.....
இப்படி வரிக்கு ஒரு ஹைகூவாக அடுக்கிக்கொண்டே போகிறீர்கள்..... வாழ்த்துக்கள்!